108 பால்குட ஊர்வலம்

அழகுசேனை கிராமத்தில் 108 பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2023-05-16 12:10 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் அம்மன் கோவிலில் கடந்த 8-ந் தேதி அக்னி வசந்த விழா தொடங்கியது.

இதை முன்னிட்டு இன்று காலை திரவுபதியம்மன் பிறப்பை முன்னிட்டு கிராம மக்கள் பம்பை உடுக்கை மேளதாளத்துடன் விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

நாளை (வியாழக்கிழமை) காலை திரவுபதியம்மன் கல்யாணமும், மாலையில் திருமண வரவேற்பு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

வருகிற 28-ந் தேதி துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி விழாவும் நடக்கிறது. 29-ந் ்தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் சார்பில் இளைஞர்கள், மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்