குலசை முத்தாரம்மன்கோவில் உள்பட 12 கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை

குலசை முத்தாரம்மன்கோவில் உள்பட 12 கோவில்களில் 108 திருவிளக்கு பூஜையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-14 15:04 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உள்பட 12 கோவில்களில் நேற்று 108 திருவிளக்கு பூஜையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

திருவிளக்கு பூஜை

தமிழகத்தில் நேற்று 12 கோவில்களில் திருவிளக்கு பூஜை நடந்தது. சென்னையில் பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் ஆகிய 12 கோவில்களில் நேற்று 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜையை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி வரவேற்று பேசினார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலைத் துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை உரை ஆற்றினார்.

முன் முகப்பு மண்டபத்துக்கு அடிக்கல்

முன்னதாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் முன் முகப்பு மண்டபம் கட்டுவதற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் நிர்வாகி ராமசுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் உமரி சங்கர், உடன்குடி ஒன்றிய சேர்மன் பாலசிங், முத்தாரம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன்காடு கண்ணன், தண்டுபத்து ராமசாமி குடும்பத்தினர், உடன்குடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜேஷ், மாவட்ட பிரதிநிதி தன்ராஜ், தமிழ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

------------------

Tags:    

மேலும் செய்திகள்