பிணை உத்தரவாத உறுதிமொழியை மீறிய குற்றவாளிக்கு 1,073 நாட்கள் சிறை தண்டனை - திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அதிரடி உத்தரவு

பிணை உத்தரவாத உறுதிமொழியை மீறிய குற்றவாளிக்கு 1,073 நாட்கள் சிறை தண்டனை விதித்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அதிரடி உத்தரவு வழங்கினார்.

Update: 2022-11-08 08:00 GMT

சென்னை பெரும்பாக்கம் எழில்நகர் 85-வது பிளாக் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் மீது ஒரு கொலை முயற்சி உள்பட 3 வழக்குகள் உள்ளது.

இந்தநிலையில் அருண்குமார், கடந்த மாதம் 8-ந் தேதி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார். தான் திருந்தி வாழ போவதாகவும், 3 வருட காலத்துக்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என்றும் உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார்.

ஆனால் அருண்குமார், கடந்த 25-ந் தேதி தனது நண்பர் சதீஷ்குமாருடன் சேர்ந்து மணி, முருகன் ஆகியோரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சிந்தாதிரிப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணை பத்திர உறுதிமொழியை மீறியதால் அவருக்கு, 3 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள 1,073 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறைதண்டனை விதித்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டார். அதன்பேரில் அருண்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்