104 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
104 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அறந்தாங்கி காரணிகாடு பகுதியில் 104 கிலோ ரேஷன் அரிசியை விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளத்துரையை சேர்ந்த சிவாஜி என்பவர் மீது குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.