1008 திருவிளக்கு பூஜை
சிவராத்திரி 2்-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு விளக்குக்கு பூஜை செய்து வழிபட்டனர்.;
மதுரை அம்மன் சன்னதி விட்ட வாசல் மண்டபத்தில் வீற்றிருக்கும் முனீஸ்வரர் சுவாமி கோவிலில் 81-வது மகா சிவராத்திரி விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. சிவராத்திரி தினத்தன்று முனீஸ்வரருக்கு வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவராத்திரி 2்-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு விளக்குக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி என்.சண்முகம் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.