வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் 100 சதவீதம் இணைப்பு

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் 100 சதவீதம் இணைத்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

Update: 2022-09-19 18:40 GMT

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்பட ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்த்தல், சிறப்பான வாக்காளர் சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகங்களில் 100 சதவீதம் முழுமையாக முடித்து பாலி கிராம உதவியாளர் தே.விநாயகம் முதலிடம், சர்வந்தாங்கல் கிராம உதவியாளர் ச.ராஜா இரண்டாம் இடம், கரிவேடு கிராம உதவியாளர் சே.சரிதா மூன்றாம் இடம், சின்னகுக்குண்டி அங்கன்வாடி பணியாளர் ஆர்.விஜயசாந்தி நான்காம் இடம், முப்பதுவெட்டி அங்கன்வாடி பணியாளர் எம்.பாரதி ஐந்தாம் இடம், கலவையைச் சேர்ந்த கிராம உதவியாளர் எஸ்.ரமணி ஆறாம் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் 6 பேரையும் பாராட்டி மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சான்றிதழ் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை கலெக்டர்கள் சத்யபிரசாத், மணிமேகலை, தேர்தல் தாசில்தார் ஜெயக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்