ராசிபுரம்
ராசிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்டறிவதற்காக நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் அறிவுறுத்தலின்படி நகராட்சி சுகாதார அலுவலர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சிவா, லோகநாதன், மேற்பார்வையாளர்கள் முத்தமிழ் செல்வன், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மளிகை கடைகள் உள்பட வர்த்தக நிறுவனங்களில் சோதனையிட்டனர். அப்போது 10 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 10 கடைகளுக்கும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.