100 அடி உயர கொடி கம்பம் விழுந்து அ.தி.மு.க. தொண்டர் சாவு

மதுராந்தகம் அருகே 100 அடி உயர கொடி கம்பம் விழுந்து அ.தி.மு.க. தொண்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-15 21:37 GMT

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் நெடுஞ்சாலையோரத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க. கம்பத்தில் கொடி ஏற்றி வைத்திருந்தார்.

அந்த கொடி கம்பம் சேதம் அடைந்திருந்தது. அதை மாற்ற நேற்று ராட்சத கிரேன் மூலம் கொடிகம்பத்தை கழற்றி மீண்டும் பொருத்தும் பணி நடைபெற்றது.

சாவு

கொடிகம்பம் நிலை நிறுத்தும்போது இரண்டாக உடைந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அ.தி.மு.க. தொண்டரான மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பன் (வயது 40) மீது விழுந்தது இதில் செல்லப்பன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பலியான செல்லப்பனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்