தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிவகாசி அருகே உள்ள மாரனேரியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் மனநலம் பாதித்த 34 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகசாமியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து ஆறுமுகசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.