கஞ்சா வழக்கில் 5 பேருக்கு 10 ஆண்டு சிறை - மதுரை கோர்ட்டு தீர்ப்பு

கஞ்சா வழக்கில் 5 பேருக்கு 10 ஆண்டு சிறை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-03-15 21:37 GMT


மதுரை திடீர்நகர் போலீஸ் நிலையத்துக்கு எதிரில் மேலவாசல் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கடந்த 26.6.2021 அன்று இந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேலவாசல் பகுதியைச் சேர்ந்த மம்மலைராஜா (வயது 22), மணிகண்டன் என்ற சின்டெக்ஸ் மணி (20), சூர்யா என்ற ஏசு (20), விக்னேஷ் (20), அரிச்சந்திரன் என்ற பாண்டி (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிவில் மேற்கண்ட 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்