ஈரோட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஈரோட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
ஈரோட்டை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவர் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சுபாஷ் தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டு இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை சுபாஷ் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுபாசை கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.