தகுதி சான்றிதழ் பெறாத 10 வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறையில் தகுதி சான்றிதழ் பெறாத 10 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Update: 2023-05-25 18:45 GMT

மயிலாடுதுறை, சீர்காழி சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 124 கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அந்த தணிக்கையின்போது முறையான வாகன தகுதி சான்றிதழ் பெறாமலும், அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் சென்ற 30 வாகனங்களுக்கு அபராதத்துடன் கூடிய வாகன வரி வசூல் செய்யப்பட்டது. அதில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையாக தகுதி சான்றிதழ் பெறாத 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டன. இந்த தணிக்கையின் போது மட்டும் ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்து 127 அபராதத்துடன் கூடிய வாகன வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்