லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே: லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

Update: 2022-10-31 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை வெளியூருக்கு கடத்தி செல்ல இருப்பதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஏட்டு ராஜா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கே புறப்பட தாயார் நிலையில் இருந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் 153 அரிசி மூட்டைகள் இருந்தன. அதில் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்பது தொியவந்தது. மொத்தம் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து லாரி டிரைவர் வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே உள்ள கோவிந்தரரெட்டிபாளையம் கிராமத்தை சார்ந்த சுப்பிரமணி மகன் சிவகுமார்(வயது 46) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது. இங்குள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வேலூரில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சிவகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து லாரியுடன் 10 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து உணவு கடத்தல் தடு்ப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்