அதிவேகமாக சென்ற 10 தனியார் பஸ்களுக்கு அபராதம்

அதிவேகமாக சென்ற 10 தனியார் பஸ் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-10-27 18:45 GMT

விழுப்புரம் அருகே கோலியனூரில் நேற்று முன்தினம் காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் தட்சிணாமூர்த்தி பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அங்கு திரண்டு வந்து அந்த பஸ் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்வதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், வசந்த் மற்றும் போலீசார், விழுப்புரம் பானாம்பட்டு பாதை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசு விதிமுறைகளை மீறி விழுப்புரம்- கடலூர், விழுப்புரம்- புதுச்சேரி, புதுச்சேரி- விழுப்புரம், விழுப்புரம்- வளவனூர் ஆகிய மார்க்கங்களில் இருந்து அதிவேகமாக வந்த 10 தனியார் பஸ்களை நிறுத்தி அதன் டிரைவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர். மேலும் அந்த டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் ரத்து செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்