10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியது, என் அருகில் இருந்தவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் மனவருத்தத்தில் இல்லை. மனமகிழ்ச்சியாக இருக்கின்றனர். பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியது திருப்திகரமாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.