10 ஊராட்சி தலைவர்கள் வெற்றி சான்றிதழை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு
மயிலாடுதுறையில் 10 ஊராட்சி தலைவர்கள வெற்றி சான்றிதழை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறையில் 10 ஊராட்சி தலைவர்கள வெற்றி சான்றிதழை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
68 ஊராட்சிகள் தேர்வு
பிரதான்மந்திரி ஆதர்ஷ் கிராமயோஜனா திட்டம் பட்டியல் சமூக மக்கள் வாழும் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கிராமப்புறங்களில் சாலை, குடிநீர் வசதி, சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம் மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.13 கோடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டிற்கு 68 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 212 பணிகள் சுமார் ரூ.13 கோடிக்கு மேல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
விதிகளுக்கு முரணாக அரசு அதிகாரிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 4 ஊராட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். அதில் 3 பேரை அன்று மாலை விடுதலை செய்த நிலையில் புளியந்துரை ஊராட்சி தலைவர் நேதாஜி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வெற்றி சான்றிதழ்
விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும், போராட்டம் நடத்திய ஊராட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெறக்கோரி கொள்ளிடம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் கிள்ளிவளவன், ஊராட்சி தலைவர்கள் முதலைமேடு நெப்போலியன், காட்டூர் வடிவேல், மகேந்திரபப்ள்ளி இளவரசிசிவபாலன், அளக்குடி சாந்தினிரமேஷ், திருக்கழுகாவூர் சத்யாஉதயகுமார், பன்னங்குடி சுதாலெனின், கடவாசல் பாப்பாத்திபன்னீர்செல்வம், புத்தூர் பிரேமாமுருகேசன் ஆகிய ஊராட்சி தலைவர்கள் தாங்கள் போட்டியிட்டு வெற்றிபெற்றபோது மயிலாடுதுறை கலெக்டரிடம் திருப்பிகொடுக்க வந்தனர் அப்போது. கலெக்டர் இல்லாததால் பல மணிநேரம் காத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.