இலங்கையில் இருந்து மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வருகை
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
ராமேசுவரம்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. சாமானிய, ஏழை மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர்.
இதனால் இலங்கையிலிருந்து இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக இன்று தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
மன்னாரில் இருந்த தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்த இவர்களை கடலோர போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.