சென்னையில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி பணம் பறிமுதல்

செனையில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-30 02:26 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீசார் பள்ளிகொண்டாவை அடுத்த சின்ன கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சலையில் நேற்று இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையின் ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் லாரி மற்றும் கார் நிற்பதை கண்டனர். இதனையடுத்து, அங்கு சென்று கார் மற்றும் லாரியில் சோதனை நடத்திய போலீசார் அதில் 10 கோடி ரூபாய் பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் இருந்து கார் மூலம் 48 கட்டுகளில் கொண்டுவரப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்தை பள்ளிக்கொண்டாவில் வைத்து காரில் இருந்து லாரிக்கு மாற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், ஒருவர் மதுரையை சேர்ந்தவர். லாரி டிரைவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் இருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட 10 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தமானது? கேரளாவில் யாரிடம் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்