சேலம் அருகே 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்-3 பேர் கைது

சேலம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-07 22:22 GMT

வாகன சோதனை

சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் போலீசார் சேலம் அருகே கொண்டலாம்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய போது அதில் மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாழிக்கல்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் சக்திமுருகன் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

2 பேர் கைது

அதே போன்று அந்த வழியாக வந்த மேலும் 2 சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்த ஜாரி கொண்டலாம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (52), பாலசவுந்தர் (25) ஆகிய 2 போலீசார் பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்