லாரியில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

லாரியில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-01 19:59 GMT

அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட அம்புராணி அடைக்கலம் காத்தார் கோவில் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து, திருவையாறு தாலுகா சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த சூரியராஜ் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்து கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்