வெண்ணந்தூரில் 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வெண்ணந்தூரில் 1¼ டன் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வெண்ணந்தூரில் 1¼ டன் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1¼ டன் ரேஷன்அரிசி பறிமுதல்
நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் வெண்ணந்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசமரம் பஸ்நிறுத்தம் அருகே ஷெட்டிற்கு பின்னால் காலி நிலத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன்அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து 25 சாக்கு பைகளில் இருந்த 1¼ டன் ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் மோகன் (வயது30) என்பவர் மொபட்டில் ரேஷன்அரிசி மூட்டைகளை கடத்தி வந்து அங்கு வைத்து இருப்பது தெரியவந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து போலீசார் மொபட்டுடன் 1¼ டன் ரேஷன்அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். கார் டிரைவர் மோகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் ரேஷன்அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.