மகாதேவர் கோவிலில் ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை

திருவட்டார் அருகே உள்ள மகாதேவர் கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-02-21 18:45 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள மகாதேவர் கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மகாதேவர் கோவில்

திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழியை அடுத்த கும்பளத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. கருவறையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ்இந்த கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்்கள். நேற்று முன்தினம் மாலையில் வழக்கமான பூஜைகளை முடித்து விட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

கொள்ளை

இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் அர்ச்சகர் கோவிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது கோவிலில் இருந்த வெண்கலத்திலான பெரிய அணையா விளக்கு, ஒரு குத்துவிளக்கு மற்றும் 5 மணிகள் ஆகியவை மாயமாகி இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்மஆசாமிகள் கோவிலின் சுற்றுச்சுவரில் ஏறிக்குதித்து உள்ளே புகுந்து விளக்குகள், மணிகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் வல்சலம் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்

மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த கொள்ளை குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த மாதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அருகே உள்ள நரசிம்மர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போனதில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கபடாதநிலையில் தற்போது மகாதேவர் கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்தது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்