அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சீர்வரிசை

கீழ்வேளூர் அருகே அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சீர்வரிசை வழங்கப்பட்டது.

Update: 2023-04-30 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சீர்வரிசை வழங்கப்பட்டது.

அரசு பள்ளி

கீழ்வேளூர் ஒன்றியம் திருக்கண்ணங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த பள்ளிக்கு தேவையான பொருட்கள், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கிராமமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டுக்கான சீர்வரிசை பொருட்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது.

சீர்வரிசை

இதில் ரூ.1 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு தேவையான இருக்கைகள், எல்.இ.டி. டி.வி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் மிஷின், பீரோ, குடம், பாய்கள், மின் விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை தலைமை ஆசிரியர் சாந்தியிடம் வழங்கினர்.

இதில் கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன், அனைத்து கட்சி பிரமுகர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராமமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. இதில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்