1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச்சென்று பிடித்தனர்.

Update: 2023-08-19 18:59 GMT

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச்சென்று பிடித்தனர்.

உணவு பொருட்கள்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இங்கு இருந்து அதிக அளவில் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் உடைமைகள் அதிக அளவில் இருந்தால், அதனை கார்கோ (சரக்கு) பிரிவு மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்தி கொண்டு வருவது வழக்கம்.

விரட்டி பிடித்தனர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது 2 பயணிகள் கார்கோ பிரிவு மூலம் அனுப்பி வைத்த தங்களது உடைமைகளை பெற்று செல்ல சென்றனர். இதனிடையே அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.சோதனையில் அவர்கள் கொண்டுவந்த பொருட்களில் துகள் வடிவில் தங்கம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 2 பயணிகளில் ஒருவர் தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் சினிமா பாணியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டிச்சென்று பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கம் பறிமுதல்

பின்னர் அவர்களிடம் இருந்து 920 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.55 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். மேலும் பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்