1 வார்டு உறுப்பினருக்கான தேர்தல்
மேலப்பாவூர் பஞ்சாயத்தில் 1 வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடக்கிறது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் யூனியன் மேலப்பாவூர் பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினர் நாராயணன் என்பவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சில நாட்களில் அவர் காலமானார். அதனை தொடர்ந்து வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருந்து வருகிறது. தற்போது இந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 3 பேர் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்ட நிலையில், ஒரு பெண் வேட்பாளர் உள்பட 4 பேர் போட்டியில் உள்ளனர்.
புதிய உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 9-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக மேலப்பாவூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும், 15-ந் தேதி புதிய உறுப்பினர் பதவியேற்பும் நடைபெற உள்ளது.
இந்த பஞ்சாயத்து பகுதியில் தேர்தல் விதிமுறைகள் வருகிற 14-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தேர்தல் நடத்தும் அலுவலர், கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர் பா.கண்ணன் தெரிவித்தார்.