பசும்ெபான் தேவர் நினைவாலயம் முன்பு அரசு சார்பில் ரூ.1½ கோடியில் மேற்கூரை

பசும்பொன் தேவர் நினைவாலயம் முன்பு அரசு சார்பில் ரூ.1½ கோடியில் மேற்கூரை அமைக்கப்படும் என அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் கூறினார்.

Update: 2023-10-05 18:45 GMT

கமுதி, 

பசும்பொன் தேவர் நினைவாலயம் முன்பு அரசு சார்பில் ரூ.1½ கோடியில் மேற்கூரை அமைக்கப்படும் என அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து மரியாதை செலுத்துவர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

முன்னதாக நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது இல்லம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். குருபூஜையின் போது, அஞ்சலி செலுத்த வரும் ஏராளமான பொதுமக்கள் மழை மற்றும் வெயிலில் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பால்குடம், முளைப்பாரி மற்றும் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் போது மழை மற்றும் வெயிலால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ரூ.1½ கோடியில் மேற்கூரை

இது குறித்து பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அரசு சார்பில் பசும்பொன் தேவர் நினைவாலயத்திற்கு எதிரே ரூ.1½ கோடி மதிப்பீட்டில் நிரந்தரமாக மேற்கூரை அமைத்து தரப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன், இணை இயக்குனர் (நினைவகங்கள்) தமிழ்செல்வராஜன், தி.மு.க. மாவட்டச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், தாசில்தார் சேதுராமன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத்தலைவர் சித்ராதேவிஅய்யனார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கர பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் முதுகுளத்தூர் மேற்கு சண்முகம், கடலாடி வடக்கு ஆறுமுகவேல், சாயல்குடி கிழக்கு குலாம் முகமது, முதுகுளத்தூர் மத்திய கோவிந்தராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சரை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, குமார், தங்கவேல் உள்பட பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்