திண்டிவனம் அருகேஆம்னி பஸ் கவிழ்ந்து 9 பேர் காயம்

திண்டிவனம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 9 பேர் காயமடைந்தனா்.

Update: 2023-05-05 18:45 GMT


திண்டிவனம், 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த மேலையூர் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 50) என்பவர் ஓட்டினார்.

பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி, சாலையில் கவிழ்ந்தது.

இதில், பஸ்சில் பயணம் செய்த சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த உதயகுமார்( 53), சென்னை அமுதன் (47), கிருஷ்ணன் (48), ப்ரியா (27), சென்னை வண்ணாரப்பேட்டை தமீம் அன்சாரி (42), மதுரவாயல் ஹசைன் (40) , திண்டிவனம் ரஞ்சிதம் (50), நெல்லை மாவட்டம் வள்ளியூர் மாசான முத்து (33), பாலக்காடு ஷாஜகான் (40) ஆகிய 9 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக, அந்தபகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்