இரும்பு திருடிய 3 சிறுவர்கள் கைது
திட்டக்குடி அரிசி ஆலையில் இரும்பு திருடிய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திட்டக்குடி, ஏப்.29
திட்டக்குடி பஸ் நிலையத்தின் பின்புறம் செயல்படாத அரிசி ஆலை உள்ளது. சம்பவத்தன்று இந்த அரிசி ஆலையில் புகுந்து இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்களை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை கடலூரில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.