கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை சாகுபடி அதிகரிப்பு-கொள்முதல் விலை குறைவால் விவசாயிகள் கவலை

கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை சாகுபடி அதிகரிப்பு- கொள்முதல் விலை குறைவால் விவசாயிகள் கவலை

Update: 2023-06-09 18:45 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயமே உள்ளது. மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான நிலப்பரப்பில் தேயிலை பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். வழக்கமாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கோத்தகிரி பகுதியில் உறைப்பனி பொழிவு காணப்படும். இதன் காரணமாக தேயிலைத் தோட்டங்களில் கொழுந்துகள் கருகி பசுந்தேயிலை சாகுபடி பாதிக்கப்படும்.

பனிப்பொழிவில் இருந்து தேயிலை செடிகளைப் பாதுகாக்க விவசாயிகள் தேயிலைச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சியும், சருகுகளை செடிகளின் மேல் பரப்பியும் பாதுகாப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோத்தகிரி பகுதியில் பனிக்காலத்தில் உறைப்பனியின் தாக்கம் காணப்படவில்லை. இதையடுத்து கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டதுடன், போதிய சூரிய வெளிச்சத்துடன், இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டு வளர்ந்து, பசுந்தேயிலை சாகுபடி வெகுவாக அதிகரித்து வருகிறது. தேயிலைத் தோட்டங்களில் கொழுந்துகள் நன்கு வளர்ந்துள்ளதால், தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருகின்றன. சாகுபடி அதிகரித்து வந்தாலும் கொள்முதல் விலை உயராமல் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்