கூடலூரில் ஓய்வுபெற்ற மின்வாரிய தொழிலாளர்கள் பேரவை கூட்டம்

கூடலூரில் ஓய்வுபெற்ற மின்வாரிய தொழிலாளர்கள் பேரவை கூட்டம்

Update: 2023-04-11 18:45 GMT

கூடலூர்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல அமைப்பு நீலகிரி கூடலூர் கிளையின் 6-வது ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் காட் ஸ்ப்ரே மேத்யூ தலைமை தாங்கினார். செயலாளர் சவுகத் அலி, பொருளாளர் கார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ராமநாதன் சிறப்புரையாற்றினார். அரசு போக்குவரத்து கழக சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன், கோவை பாலு ஆகியோர் பேசினர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், மின்வாரிய ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியத்தை அரசே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ராஜகோபால் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்