இடத்தகராறில் ஒருவர் கொலை: மேலும் ஒருவர் கைது

இடத்தகராறில் ஒருவர் கொலை: மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-15 19:36 GMT

திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலிபுல்லா (வயது 54). இவருக்கும் ஜவுளிக்கடை நடத்தி வந்த தனபால் என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில் தனபால் மற்றும் அவரது மனைவி முத்துமாரி, கோவிந்தராஜ், பாலசுப்ரமணியன் ஆகியோர் சேர்ந்து கலிபுல்லாவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கலிபுல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனபால், முத்துமாரி, கோவிந்தராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பாலசுப்ரமணியன் (45) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மலைக்குடிபட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த பாலசுப்ரமணியனை திருமயம் போலீசார் கைது செய்து திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்