களத்தில் சீறும் காளைக்கு மண் குத்தும் பயிற்சி

களத்தில் சீறும் காளைக்கு மண் குத்தும் பயிற்சி நடைபெற்றது

Update: 2022-12-03 18:42 GMT


தமிழர் வீரத்தை பறைசாற்றும் விதமாக பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். உலக பிரசித்தி பெற்ற இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இந்தநிலையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக வலுவான கால்களுக்காக தினந்தோறும் 2 கிலோ மீட்டர் வரை நடைப்பயிற்சியும், கழுத்து, கொம்பு வலுப்பெற மண் குத்தும் பயிற்சியும், நீண்டதூரம் மூச்சை அடக்கி ஓட நீச்சல் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை முடக்கத்தான் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை மண் குத்தும் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்