அந்தியூரில் சின்ன மாரியம்மன் ஊர்வலம்

kovil

Update: 2022-11-15 22:30 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே சின்னபருவாச்சியில் பழமையான சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக வெள்ளியால் செய்யப்பட்ட 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பத்ரகாளியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அம்மன் சிலைக்கு பட்டு உடுத்தி, மலர் அலங்காரம் செய்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தார்கள். செம்புளிச்சம்பாளையம், காட்டூர், பருவாச்சி, அண்ணாமடுவு ஆகிய பகுதியில் வழிநெடுக பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டார்கள். ஊர்வலம் முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்