சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் நெல் கொள்முதல் நிலைய வளாகம்

paddy sales center road damage

Update: 2022-11-15 18:49 GMT

மன்னார்குட;

மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டையில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் நெல் கொள்முதல் நிலைய வளாகத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்

மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளான வடசேரி, மேல தள்ளிக்கோட்டை, முக்களம், சாத்தனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு கொண்டு வருகின்றனர். இந்த கொள்முதல் நிலைய வளாகம் மற்றும் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் பாதை செப்பனிடப்படாததால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இடையூறுகள்

இந்த பகுதியில் சிறு மழை பெய்தாலும் நெல் கொள்முதல் நிலைய பாதையிலும், வளாகத்திலும் நீர் தேங்கி சேறும், சகதியுமாகி விடுகிறது. இதனால் கொள்முதல் நிலையத்துக்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரும் போதும், கொள்முதல் செய்த நெல்லை லாரிகளில் வெளியில் கொண்டு செல்லும் போதும் வாகன ஓட்டிகள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

சிமெண்டு தளம்

நெல் கொள்முதல் நிலைய சாலை மற்றும் வளாகத்தை சிமெண்டு தளமாக மாற்றித்தர வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.எனவே விவசாயிகளின் நலன் கருதி தளிக்கோட்டையில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலைய வளாகம் மற்றும் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் சாலையை சிமெண்டு தளமாக மாற்றி சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்