சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து

Accident due to stray cows on roads

Update: 2022-11-15 18:00 GMT

வாலாஜாபேட்டையில் பிரதான சாலைகளான டிரங்க்ரோடு, புஜன்னர்தெரு, திருமலை தெரு, அம்மூர் ரோடு, அணைக்கட்டு ரோடு, மற்றும் நகரில் உள்ள 24 வார்டுகளிலும், பஸ் நிலைய வளாகத்திலும் சுற்றித் திரியும் மாடுகளால் தினமும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து வாலாஜா நகராட்சிக்கும், தேசிய நெடுஞ்சாலை துறைக்கும், காவல்துறைக்கும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கொண்டு சென்றனர். ஆனாலும் இதுவரை சாலைகளில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை. மாடுகளால் போக்குவரத்து நெரிச்சலும் ஏற்பட்டுவருகிறது.

இரவில் இருள் நிறைந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் படுத்து கிடப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சாலைகளில் நடமாடும் மாடுகளின் கழுத்தில் அதன் உரிமையாளர் பெயர், விலாசம் தாங்கிய அடையாள அட்டையை தொங்கவிட வேண்டும். அல்லது மாடுகளை பிடித்து அருகில் உள்ள கோசாலைகளில் சேர்த்திட அதிகாரிகள் முன் வர வேண்டும். மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்திட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்