இந்திய மக்களை பாஜக புரிந்து கொள்ளவில்லை - ராகுல் காந்தி விமர்சனம்

தமிழகத்துடன் என் உறவு ஆழமானது என்று ராகுல்காந்தி கூறினார்.

Update: 2022-09-07 13:13 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரை சாலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

3 சமுத்திரமும் சங்கமிக்கும்கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்துடன் என் உறவு ஆழமானது. தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் வரும்போது மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் செல்கிறேன். தேசத்தை ஒற்றுமைப்படுத்தக்கூடிய அவசியம் எழுந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ், பாஜக, தேசியக் கொடியை தங்கள் தனிப்பட்ட கொடியாக கருதுகிறார்கள். தேசியக்கொடி என்பது தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமானது அல்ல. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வெல்லப்பட்டது தான் தேசியக்கொடி.

ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு மொழி, ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது தேசியக்கொடி. தற்போது மிகப்பெரிய தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் தேசியக்கொடி உட்படுத்தப்படுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையை உறுதிபடுத்துகிறது இந்த கொடி; இந்திய மக்கள் ஒருநாளும் அச்சப்பட மாட்டார்கள்

இந்திய மக்களை பாஜக புரிந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை வைத்து கட்டுப்படுத்த நினைக்கின்றனர். ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இங்கே வருகை தந்து எனது நடை பயணத்தை வாழ்த்தி, தொடங்கி வைத்த அன்புச் சகோதரர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்