புனித சலேத் அன்னை ஆலய விழா
கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலய விழாவையொட்டி மின்தேர் பவனி நடைபெற்றது.
கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை. கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆலய பெருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நவநாள் திருப்பலிகள் மற்றும் மறையுரை சிந்தனைகள் நடைபெற்றன. அன்னையின் பெருவிழா மற்றும் விண்ணேற்பு விழாவிற்கு மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் இ.ெப.செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகராட்சி தலைவர்கள் முகமது இப்ராகிம், ஸ்ரீதர், வட்டார அதிபர் ஜான் திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி விடிய, விடிய முக்கிய வீதிகள் வழியாக வந்து மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தை அடைந்தது.