வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க தகுதி தேர்வுகளுக்கான பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க தகுதி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2023-09-03 18:43 GMT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகமான தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறியவர்கள் வெளிநாடு சென்று பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க அதற்கான தகுதி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்ஜினீயரிங் மற்றும் மேலாண்மை, தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வர்த்தகம், பொருளாதாரம், கணக்கியல் நிதி, மனிதநேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளை வெளிநாடுகளில் படிக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான செலவு தொகை தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சி முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடரலாம். இந்த திட்டத்தில் சேர www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்