பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் -நடிகை அமீஷா படேல்
பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நடிகை அமீஷா படேல் கூறி உள்ளார்.
மும்பை
பாலிவுட் நடிகை அமீஷா படேல் சமீபத்தில் பீகாரில் சட்டமன்றத் தேர்தலில் லோக்ஜன சக்தி கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என கூறி உள்ளார்.
பீகாரில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. பீகாரில் லோக் ஜன சக்தி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்ற பாலிவுட் நடிகைக்கு கொலை மிரட்டல் இருந்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை அமீஷா படேல் கூறியதாவது;-
"டாக்டர் பிரகாஷ் சந்திராவின் விருந்தினராக நான் சென்றேன், நான் பிரசாரம் செய்ய சென்றவர் மோசமான மனிதர், "பாட்னாவிலிருந்து 3 மணிநேரம் பிரச்சாரம் செய்யும் போது அவருடன் சேர்ந்து விளையாடுவதாக அவர் என்னை மிரட்டினார். அதே நாளில் எனக்கு மாலை விமானம் இருந்தது, ஆனால் அதைப் பிடிக்க அவர் என்னை அனுமதிக்கவில்லை, அதற்கு பதிலாக என்னை கிராமத்தில் வைத்திருந்தார், நான் ஒப்புகொள்ளாவிட்டால் என்னை அங்கேயே விட்டுவிடுவேன் என்று மிரட்டினார். நான் ஒப்புக்கொள்ளவில்லை, உடன் செல்லவில்லை.
"நேற்றிரவு கூட அவர் என்னை பிளாக்மெயில் செய்தார், அது உங்கள் கணக்கில் பணத்தை போடுகிறேன் என்னைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்லுங்கள் என்றார்.
நான் சரி என்று சொல்லி தொலைபேசியை கீழே வைக்க வேண்டியிருந்தது, ஏனெனில் அவர் நாள் முழுவதும் எனது ஊழியர்கள் மற்றும் அலுவலக மக்கள் அனைவரையும் அழைத்து என்னுடன் பேசும்படி கெஞ்சி கேட்டு கொண்டார் பின்னர் மிரட்டினார். "
அவரது அடியாட்கள் இன்று இடைவிடாது அழைக்கிறார்கள். அவர் ஒரு குண்டாவைப் போல நடந்து கொண்டார். இது எனக்கு ஒரு கனவு போல் இருந்தது. நான் மிகவும் பயந்தேன், நான் மும்பையை பாதுகாப்பாக அடையும் வரை அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியில்லை. "
இந்த நபர்களைப் பற்றி உண்மையை மக்கள் அறிய வேண்டும் என்று நான் நினைப்பதால் நான் சொல்ல வேண்டியதை சொன்னேன். இது ஒரு மோசமான அனுபவம். அவர் என்னை தவறாகப் பயன்படுத்தினார். நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். அவர் எந்த பாதுகாப்பையும் வழங்கவில்லை,
என் கார் எல்லா நேரங்களிலும் அவரது அடியாட்களால் சூழப்பட்டிருந்தது, அவர் சொன்னது போல் நான் செய்யாத வரை எனது காரை நகர்த்த மறுப்பார்.
ஆமாம் எங்களைப் போன்ற பெண்கள் இந்த குண்டர்களால் எப்போதும் ஆபத்தில் உள்ளனர், மேலும் அவர்கள் தப்பிக்க முடியாது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம், அதனால் நான் பேச முடிவு செய்து இதனை கூறி உள்ளேன் என கூறி உள்ளார்.
இதுகுறித்த குற்றச்சாட்டுகளை பிரகாஷ் சந்திரா மறுத்துள்ளார். நடிகை இது குறித்து போலீசில் புகார் எதுவும் தெரிவிக்க வில்லை.
பொய்யான கூற்றுக்களை தெரிவிக்க அமீஷா படேலுக்கு ஜான் ஆதிகர் கட்சித் தலைவர் பப்பு யாதவ் பணம் கொடுத்ததாக சந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் வாக்களிப்பின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நான் நம்புகிறேன், ஆனால் எனது உறவினர்களில் ஒருவர் அவரது [படேலின்] பேரணியை ஒப்ராவில் ஏற்பாடு செய்தார். அவருக்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன என கூறிஉள்ளார்.