மாருதி டிசையர் சி.என்.ஜி.
மாருதி சுஸுகி நிறுவனம் சி.என்.ஜி.யில் இயங்கும் டிசையர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதில் இரண்டு வேரியன்ட்கள் (வி.எக்ஸ்.ஐ. மற்றும் இஸட்.எக்ஸ்.ஐ.) வந்துள்ளன. இதில் கே சீரிஸ் இரட்டை ஜெட் என்ஜின் உள்ளது. இது 57 கிலோ வாட் திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெ ளிப்படுத்தும். சி.என்.ஜி.யில் இயங்கும் இந்த மாடல், இந்நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் வடிவமைக்க ப்பட்ட து. இதனால் அதிக பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதற்கேற்ற சிலிண்டர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. டிசையர் மாடலை இதுவரை 22 லட்ச ம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்ற னர். இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு இருப்பதைத் தொடர்ந்து இதில் தற்போது சி.என்.ஜி.யில் இயங்கும் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.