இந்தியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெற்றார் பி.வி.சிந்து
இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆஷ்மிதா சாலிஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.;
புதுடெல்லி,
புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஆஷ்மிதா சாலிஹா மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் விளையாடினர்.
36 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், ஆஷ்மிதா சாலிஹாவை 21-7, 21-18 என்ற கணக்கில் வீழ்த்தி முன்னாள் உலக சாம்பியனான முதல் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.