கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டு செல்பி வீடியோ பதிவிட்டு உயிரை மாய்த்தார்.;

Update:2023-02-06 01:39 IST

ராமநகர்:-

ராமநகர் மாவட்டம் கக்கலிபுராவை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 33). இவர் பெங்களூருவில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், சிவராஜ் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அவருக்கு போதிய வருமானம் வராததால், வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் சிவராஜடம் பணத்ைத திரும்ப கேட்டு வந்துள்ளனர். மேலும் அதிகளவு வட்டி கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். வட்டி கட்டாததால் அவரது மோட்டார் சைக்கிளை தூக்கி சென்றனர். இதனால் சிவராஜ் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவராஜ், தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக அவர், செல்பி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டி வசூலித்து தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதுகுறித்து கக்கலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்