இளைஞர்களுக்கு பலனளிக்கும் திட்டம் அக்னிபத்: அமித்ஷா
இளைஞர்களுக்கு பலனளிக்கக்கூடிய திட்டம் அக்னிபத் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் 3-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. பீகாரில் 2 நாட்களாக தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வட இந்தியாவின் பல மாநிலங்களும் போர்க்களமாகி உள்ளன. தென்னிந்தியாவிலும் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் இளைஞர்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அமித்ஷா தமது டுவிட்டர் பக்கத்தில், அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்கள் பெரும் பலன் அடைவார்கள்; இளைஞர்கள் நமது நாட்டுக்கு சேவை செய்யும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவர்.
இளைஞர்களுக்கு பலனளிக்கக்கூடிய திட்டம் அக்னிபத் என்றார்.