கார் ஓட்டும் பயிற்சிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் இளம்பெண் கார் ஓட்டும் பயிற்சி பெற்று வந்தார்.

Update: 2024-07-21 02:33 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வரா நகர் பகுதியில் தனியார் ஓட்டுநர் பயிற்சி மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு அண்ணப்பா என்பவர் பயிற்சி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இளம்பெண் வழக்கம்போல் காலையில் கார் ஓட்டும் பயிற்சிக்கு சென்றார். அப்போது இளம்பெண் காரை இயக்கி உள்ளார். அவருக்கு அருகில் அண்ணப்பா அமர்ந்து பயிற்சி அளித்து கொண்டிருந்தார். அவர்களது கார் தேசிய பப்ளிக் பள்ளி அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, இளம்பெண்ணின் உடல் பாகங்களை தொட்டு அண்ணப்பா அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரை தள்ளிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மேலும் வீட்டிற்கு வந்தவுடன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் பசவேஸ்வரா நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் பேலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணப்பாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அண்ணப்பா திட்டமிட்டு இளம்பெண்ணை மட்டும் தனியாக அழைத்து சென்று பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்