இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது நபர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2024-05-17 23:38 IST

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் சாலையோரம் இருந்த மதுபானக் கடை அருகே கடந்த 14-ம் தேதி இரவு 8 மணியளவில் இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு தெருவோரமாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்து நபர் ஒருவர் இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது நபர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திடீரென பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அப்போது அந்த பெண் அலறி சத்தம் போட்டதை அடுத்தும், அந்த வழியாக பொது மக்கள் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை அடுத்து. ராவத்பூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்