புனித் ராஜ்குமாரின் 'கந்ததகுடி' படம் பார்த்த எடியூரப்பா

சிவமொக்காவில் புனித் ராஜ்குமாரின் ‘கந்ததகுடி' படத்தை எடியூரப்பா தனது குடும்பத்துடன் பார்த்தார்.

Update: 2022-11-04 19:00 GMT

சிவமொக்கா;


மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் கடைசியாக நடித்த 'கந்ததகுடி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. புனித்ராஜ்குமாரின் ரசிகர்கள் 'கந்ததகுடி' படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது மகனும், எம்.பி.யுமான ராகவேந்திராவுடன் சிவமொக்கா நகரில் உள்ள திரையரங்கிற்கு சென்று 'கந்ததகுடி' படத்தை பார்த்து ரசித்தார்.

திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தவர்கள், ஊழியர்கள் எடியூரப்பாவை பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர்.

மேலும் எடியூரப்பா, ஒரு குழந்தையின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து படத்தை பார்த்து முடித்துவிட்டு எடியூரப்பா சிவமொக்காவில் உள்ள வீட்டிற்கு சென்றார்.

மேலும் செய்திகள்