உலக கோப்பை: இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்,
இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்யாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.