மாரடைப்பால் தொழிலாளி சாவு; பக்கவாதத்தால் தாயும் பலியான சோகம்

எச்.டி.கோட்டை அருகே மாரடைப்பால் தொழிலாளி உயிரிழந்தார். இந்த நிலையில் பக்கவாதத்தால் தாயும் பலியான சோகம் நடந்துள்ளது.

Update: 2022-08-29 15:38 GMT

மைசூரு;


மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை டவுன் சித்தப்பாஜி தெரு பகுதியை சேர்ந்தவர் சன்னமஞ்சம்மா(வயது 58). இவரது மகன் கிருஷ்ணா(42). தொழிலாளி. சன்னமஞ்சம்மா, பக்கவாதம் நோயால் அவதிபட்டு வந்தார். இதனால் அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சன்னமஞ்சம்மாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரி டாக்டர், சன்னமஞ்சம்மா உயிர் பிழைப்பது கடினம் என்று மகன் கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணா திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா, மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் சில நிமடங்களில் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்த சன்னமஞ்ம்மாவும் உயிரிழந்தார்.

இதனால் அவர்களின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து ஒரே நேரத்தில் இறந்த தாய்-மகனின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்