மின்கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
தார்வாரில் மின்கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது.;
தார்வார்:
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பகுதியில் வசித்து வருபவர் ராகவேந்திரா பல்லாரி. கூலித்தொழிலாளி. இந்த நிலையில் இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்ப தகராறால் மனமுடைந்து காணப்பட்ட ராகவேந்திரா நேற்று காலையில் திடீரென தனது வீட்டின் அருகே உள்ள மின்கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகவேந்திராவை பத்திரமாக மீட்டனர். முன்னதாக ஹெஸ்காம் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியின் மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து போலீசார் ராகவேந்திராவுக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.