அயோத்தி ராமர் கோவிலின் முக்கிய கட்டுமான பணிகள் ஜூன் 1 முதல் தொடங்கும்: அறக்கட்டளை தகவல்

அயோத்தி ராமர் கோவிலின் முக்கிய கட்டுமான பணிகள் ஜூன் 1 முதல் தொடங்கும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Update: 2022-05-21 21:35 GMT

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவிலின் முக்கிய கட்டுமான பணிகள் வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று கோவில் கட்டுமானக்குழு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறும்போது, இந்து சமய நாட்காட்டியின்படி வருகிற ஜூன் 1 ஆம் தேதி புனிதமான தேதி என்பதால், கோவிலின் முக்கிய கட்டுமானப் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

கோவிலுக்கு செதுக்கப்பட்ட கற்கள் அயோத்தியில் உள்ள ஒன்று தவிர ராஜஸ்தானில் செயல்படும் மூன்று பட்டறைகளில் இருந்து கொண்டு வரப்படும். கோயிலின் அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாக உள்ள பீடத்தின் பணியை துரிதப்படுத்தவும் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஏழு அடுக்குகளில் ஐந்து பீடம் ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டிடப்பணிகள் முடிக்கப்பட்டு கருவறையில் ராம் லல்லாவை (குழந்தை ராமர்) அமர்த்தப்பட்டு, பக்தர்கள் தெய்வத்தை வழிபட அனுமதிக்கும் வகையில் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அயோத்தியில் இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அவை கோயில் கட்டுமானப்பணியுடன் முடிக்கப்படலாம். எவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்